இந்தியா

பூஸ்டர் தவணை: கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

10th Aug 2022 10:14 PM

ADVERTISEMENT


இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணை தடுப்பூசியாக போட்டுக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

படிக்க 'பிராமணர் அல்லாதவர்களும் இனி சபரிமலை பிரசாதங்களைத் தயாரிக்கலாம்'

இதன்மூலம், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

நாட்டில் 18 வயது முதல் 80 வரையிலான நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்துவது  குறித்து சோதனை செய்யப்பட்டது. இதில் கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT