இந்தியா

மணிப்பூரில் மியான்மரைச் சேர்ந்த 5 பேர் கைது 

10th Aug 2022 01:30 PM

ADVERTISEMENT

 

மணிப்பூரில் சட்டவிரோதமாக ஊடுருவியதாக ஒரு பெண் உள்பட மியான்மரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

உளவுத்துறை உள்ளீடுகளின் அடிப்படையில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள இங்கதல் கிராமத்தில் செவ்வாய் இரவு கைது செய்யப்பட்டனர். 

இம்பாலில் உள்ள செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

ADVERTISEMENT

மியான்மர் நாட்டவர்கள் சட்டவிரோதமாக எல்லைத் தாண்டி வந்து கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். 

அவர்களிடம் சரியான குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

படிக்க: காதலுக்கு எதிர்ப்பு: காதலருடன் சேர்ந்து 16 வயது மகனைக் கொன்ற தாய்!

மியான்மரில் இருந்து சட்டவிரோதமான மனித ஊடுருவல் மற்றும் பல்வேறு சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், குறிப்பாக ஹெராயின், அதிக போதையாக்கும் மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் ஆகியவை பரவலாக உள்ளன. 

மியான்மர் பிராந்தியங்களில் தீவிரவாதிகள் மற்றும் வடகிழக்கு தீவிரவாதிகள் அடிக்கடி எல்லை தாண்டிச் செல்வது இந்திய பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT