இந்தியா

கர்நாடகத்தில் கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலி 

10th Aug 2022 11:48 AM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு மழை தொடர்பான சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 

முடிகெரே தாலுகாவில் உள்ள தகளூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழையால் மரம் விழுந்ததில் 2 பெண்கள் வீடு இடிந்து உயிரிழந்தனர். 

துணை ஆய்வாளரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ADVERTISEMENT

படிக்க: போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்

நிவாரணத் தொகையை விரைவில் வழங்க மாவட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். 

மற்றொரு சம்பவத்தில் நரசிம்மராஜபுரா தாலுகாவில் உள்ள சாத்கோலி என்ற இடத்தில் 50 வயதுடைய நபர் நீரோடையைக் கடக்கும்போது காருடன் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

கர்நாடகாவின் பல பகுதிகளில், குறிப்பாக மலைநாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT