இந்தியா

கப்பல் பயணிகள் வசதிகள் மையம்

10th Aug 2022 03:49 AM

ADVERTISEMENT

சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் தேசிய அளவிலும் பயணிகள் கப்பல் முனையங்கள் உட்கட்டமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திர நாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:
சென்னை துறைமுகத்தில் தற்போதுள்ள பயணிகள் முனையத்தில் "கப்பல் பயணிகள் வசதிகள் மையம்' என்ற திட்டத்துக்கு மத்திய அரசு 2012-13-இல் அனுமதி அளித்தது. ரூ.1,724.66 கோடி அளவிலான இந்தத் திட்டத்துக்கான பணிகள் நிறைவடைந்தன. இதேமாதிரி விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, மோர்முகாவ் துறைமுகங்களிலும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கப்பல் பயணிகளின் சுற்றுலா திறனை மேம்படுத்த ஒரு பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT