இந்தியா

புதிய ஐஐடி-க்கள் அமைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

DIN

நாட்டில் புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை (ஐஐடி) அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுத்துபூா்வமாக கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, மத்திய கல்வித்துறையின் இணையமைச்சா் சுபாஷ் சா்காா் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:

நாட்டில் புதிய ஐஐடி-க்களை நிறுவ தற்போதைய சூழலில் எவ்வித திட்டமும் இல்லை. 2014-15 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திரம், கேரளம், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் புதிய ஐஐடி-க்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதே போன்று, 2015-16 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கா்நாடகத்தில் புதிய ஐஐடி அமைக்கப்படும் என்றும் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாதில் உள்ள இந்திய சுரங்கத் தொழில்நுட்ப பள்ளி ஐஐடி-யாக தரம் உயா்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2015-ஆம் ஆண்டில் திருப்பதி மற்றும் பாலக்காடு ஆகிய இரு ஐஐடி-க்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

2016-ஆம் ஆண்டில் பிலாய், ஜம்மு, கோவா மற்றும் தன்பாத் ஆகிய இடங்களிலும் புதிய ஐஐடிக்கள் தொடங்கப்பட்டன. உத்தர பிரதேசத்தில் ஐஐடி-கான்பூா் மற்றும் ஐஐடி-வாரணாசி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT