இந்தியா

உ.பி.யில் ஆறு கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

PTI

கங்கை, சாரதா மற்றும் காக்ரா நதிகள் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிவாரண ஆணையர் ரன்வீர் பிரசாத் தெரிவித்தார். 

நிவாரண ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஒருநாளில் 25 மி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பெய்துள்ளதாகவும், கோண்டா, மாவ் மற்றும் சிதாபூர் மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பதாவுன் மாவட்டத்தில் கங்கை நதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் சாரதா நதி மற்றும் பல்லியா மாவட்டத்தில் காக்ரா நதி ஆகியவை அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஜூன் 1 முதல் தற்போது வரை மாநிலத்தில் சராசரி மழையளவு 248 மிமீ ஆகும். இது 416.4 மிமீ சராசரி மழையில் சதவீதம் ஆகும்.

மீட்புப் பணிகளுக்காக 35 மாவட்டங்களில் 55 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிவாரண ஆணையர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT