இந்தியா

‘18 அமைச்சர்களில் ஒரு பெண்கூட இல்லை’: தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்

9th Aug 2022 03:18 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர அமைச்சரவையில் ஒரு பெண்கூட இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 18 அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவை குறித்து சுப்ரியா சுலே கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம்தான் முதல்முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கியது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் இருந்தும் 18 அமைச்சர்களில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை. இது பாஜகவின் மனநிலையை காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கமகாராஷ்டிர மாடலை பிகாரில் முயன்ற பாஜக: ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றிய நிதிஷ்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அமைச்சர்களாக பாஜகவின் 9 எம்.எல்.ஏ.க்களும், சிவசேனையின் 9 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT