இந்தியா

கரோனா அதிகரிப்பால் பீதியடையத் தேவையில்லை: கேஜரிவால் 

9th Aug 2022 05:03 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெரும்பாலான தொற்று லேசானதாக இருப்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சியின் போது அவர் கூறுகையில், 

நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாங்கள் அதைக் கண்காணித்து வருகிறோம். கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது வரும் கரோனா தொற்று லேசானவை, பீதியடையத் தேவையில்லை.

ADVERTISEMENT

படிக்க: சென்னை செஸ் ஒலிம்பியாட் கடைசி சுற்று: டிரா செய்த வைஷாலி

சுதந்திர அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" கொண்டாடப்பட்டு வருகிறது. 115 அடி உயரம் கொண்ட 500வது மூவர்ணக் கொடியை கேஜரிவால் செவ்வாயன்று ஏற்றினார். 

இலவசங்கள் குறித்த பொதுநல மனுவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இலவசக் கல்வி, இலவச சிகிச்சை அளிப்பது இலவசம் அல்ல.. அது அரசின் கடமை. ரூ. 10,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்வதும், வரிகளைத் தள்ளுபடி செய்வதும் தான் இலவசம் என்று அவர் கூறினார்.

படிக்க: மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: 18 அமைச்சர்கள் பதவியேற்பு

இதுதவிர தேர்தல் ஆணையத்திடமிருந்து கோவாவில் தனது கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும் அவர் அறிவித்தார். தில்லி மற்றும் பஞ்சாபைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இப்போது கோவாவிலும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT