இந்தியா

கூட்டணிக் கட்சி தலைவராக நிதீஷ் தேர்வு: மீண்டும் முதல்வராகிறார்?

9th Aug 2022 05:17 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளிடையே நடைபெற்ற ஆலோசனையில், கூட்டணி கட்சி தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து பிகார் மாநில முதல்வராக மீண்டும் நிதீஷ் குமார் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்கஆட்சி அமைக்க உரிமை கோரல்: ஆளுநருடன் நிதீஷ், தேஜஸ்வி சந்திப்பு

ADVERTISEMENT

பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.

இதையும் படிக்க | பாஜக கூட்டணி பலவீனமாக்கிவிடும்: நிதீஷை முன்பே எச்சரித்த எம்.எல்.ஏ.க்கள்

கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பிறகு, பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது இல்லத்தில் சென்று நிதீஷ் குமார் சந்தித்தார். 

இதையும் படிக்க நிதீஷ் குமாருக்கு பலம் கூடுகிறது: மேலும் ஒரு கட்சி ஆதரவு

இருவரும் பிகாரில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணி கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் பிகார் மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT