இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: 18 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்கவிருக்கிறார்கள்.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில்  புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

பாஜக மற்றும் சிவசேனை தரப்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

துணை முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை பொறுப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்கவிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT