இந்தியா

பிகார் ஆளுநரைச் சந்திக்கிறார் நிதிஷ் குமார்?

9th Aug 2022 11:58 AM

ADVERTISEMENT

பிகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிகாரில் அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான சூழ்நிலைகள் நிலவுகின்றன. பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிகாரில்  ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 

பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. 

ADVERTISEMENT

இந்நிலையில்தான் முதல்வர் நிதிஷ் குமார், பிகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் பிகாரில் பாஜகவுடன் கூட்டணி முறிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, கடந்த 2017ல் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | பிகாரில் என்ன நடக்கிறது? ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்களிடமிருந்து வாங்கப்பட்ட செல்லிடப்பேசிகள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT