இந்தியா

நாட்டில் 12,751-ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு

9th Aug 2022 10:39 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் மேலும் 12,751  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,751 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,41,74,650 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,31,807 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 42 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,26,772 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து இன்று 16,412 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,35,16,071 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதையும் படிக்க: திருப்புவனம் அருகே மொஹரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்: தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் 31,95,034  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 206.88 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 87.81 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT