இந்தியா

கோவாவில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்! விரைவில் தேசியக் கட்சியாகிறது ஆம் ஆத்மி?

DIN

கோவாவில் மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

தில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சி புரிந்துவரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. 

இந்நிலையில் கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

இதுகுறித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தில்லி மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, இப்போது கோவாவிலும் ஆம் ஆத்மி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால், நாங்கள் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்.

ஒவ்வொரு தொண்டரின் கடின உழைப்பிற்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT