இந்தியா

பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேச மட்டுமே தெரியும்: தேஜஸ்வி

9th Aug 2022 07:35 PM

ADVERTISEMENT

 

பிகார் சட்டப்பேரவையில் பாஜகவை தவிர அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நிதீஷ் குமாரை முதல்வராக ஏற்றுக்கொண்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிகார் மாநிலத்தில் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பகு சௌஹானை நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டாக சென்று சந்தித்து உரிமை கோரினர்.

படிக்க ஆட்சி அமைக்க உரிமை கோரல்: ஆளுநருடன் நிதீஷ், தேஜஸ்வி சந்திப்பு

ADVERTISEMENT

ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் இருவரும் ஆளுநரை சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது, ''பிராந்திய கட்சிகள் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு மக்களைத் தூண்டிவிடவும், உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும் மட்டுமே தெரியும். பிகாரில் பாஜகவின் திட்டம் பலிக்காது. நாங்கள் எந்த தொகைக்கும் விலை போகமாட்டோம் என்பதை நிரூபிப்போம்'' எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT