கைபர் பக்துன்க்வாஸ் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீர் அலி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இண்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐஎஸ்பிஆர்) வெளியிட்ட அறிக்கையின்படி,
தாக்குதலை நடத்திய தற்கொலை படையினரைக் கையாளுபவர்கள் மற்றும் உதவியாளர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பாகிஸ்தான் ராணுவம் உறுதியாக உள்ளது. துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்காக கட்டாயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுடன் மோதல்கள் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
ஜூலை 4 அன்று அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 10 பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
மிராலியில் இருந்து மாவட்டத் தலைமையகமான மிரம்ஷாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தான்.
அதேபோன்று மே 30 அன்று, ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் மற்றொரு கான்வாய் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற தற்கொலைப்படை குண்டுதாறி தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.