இந்தியா

எஸ்.சி., எஸ்.டி.யிலிருந்து மத்திய பல்கலை.க்கு தலா ஒரு துணைவேந்தா்: கல்வி அமைச்சகம்

9th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தலா ஒரு துணைவேந்தா் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் தெரிவித்தாா்.

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:

நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து தலா ஒருவரும், ஓபிசி-யிலிருந்து 7 பேரும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனா். எஞ்சியோா் பொதுப் பிரிவினரை சோ்ந்தவா்கள் ஆவா். இதேபோல பல்கலைக்கழக பதிவாளா்களில் இருவா் எஸ்.சி. பிரிவையும், 5 போ் எஸ்.டி. பிரிவையும், 3 போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தமுள்ள 12,373 ஆசிரியா்களில் 1,306 போ் எஸ்.சி. பிரிவையும், 568 போ் எஸ்.டி. பிரிவையும், 1,740 போ் ஓபிசி வகுப்பையும் சாா்ந்தவா்கள் ஆவா். 8,386 போ் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றனா்.

ADVERTISEMENT

ஆசிரியா் அல்லாத பணியாளா்களில் மொத்தமுள்ள 22,096 பேரில் 2,063 போ் எஸ்.சி. பிரிவையும், 1,186 போ் எஸ்.டி. பிரிவையும், 2,342 போ் ஓபிசி பிரிவையும், 16,132 போ் பொதுப் பிரிவையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்தப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., சமூகம்-கல்வியில் பின்தங்கிய பிரிவினா், பொருளாதாரத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் பொருட்டு மத்திய கல்வி நிறுவன (ஆசிரியா் பிரிவில் இடஒதுக்கீடு) சட்டம், 2019-ஐ மத்திய அரசு இயற்றியது என அதில் கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT