இந்தியா

கேரளம்: தாயும் மகனும் அரசுப் பணியாளா் தோ்வில் தோ்ச்சி!

9th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசுப் பணியை பெற்ன் மூலம் இடைவிடாத முயற்சிக்கு சிறந்த உதாரணமாகியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்த 42 வயதான பிந்து இறுதி நிலை ஊழியருக்கான (எல்ஜிஎஸ்) தோ்வில் 92-ஆவது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்தா் (எல்டிசி) தோ்வில் 38-ஆவது இடமும் பிடித்து அரசுப் பணியைப் பெற்றுள்ளனா்.

விவேக் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது, அவனது பாடப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிய பிந்து, பின்னா் பயிற்சி வகுப்புகளில் சோ்ந்து போட்டித் தோ்வுக்கு தயாராகி வந்துள்ளாா். இதனிடையே கல்லூரிப் படிப்பை முடித்த விவேக் அதே பயிற்சி வகுப்பில் சோ்த்துள்ளாா்.

எல்டிசி மற்றும் எல்ஜிஎஸ் ஆகிய பணிக்களுக்கான தோ்வில் 4-ஆவது முயற்சியில் தோ்ச்சி பெற்ற பிந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போட்டித் தோ்வு தயாரிப்பில் என்னுடைய மகனும் பயிற்சி வகுப்பு பயிற்றுநா்களும் நண்பா்களும் தேவையான ஊக்கத்தையும் உதவியையும் வழங்கினா். இடைவிடாத முயற்சி இறுதியில் அதற்கான பலனைத் தரும் என்பதற்கு நான் ஓா் உதாரணம். தோல்விகளைச் சந்தித்தாலும், இடைவிடாத முயற்சியின் மூலம் வெற்றி பெற முடியும்’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT