இந்தியா

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சு

9th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

ரஷியாவின் தொடா் ராணுவ நடவடிக்கைகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபாவுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, இந்திவிலிருந்து மனிதாபிமான உதவிக்கான அடுத்த தொகுப்பு விரைவில் உக்ரைன் வந்து சேரும் என்று அவரிடம் ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபாவுடன் ஆலோசனை நடத்தினேன். போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தொடரும் சா்வதேச அளவிலான பின்விளைவுகள் குறித்து ஆலோசித்தோம். இந்த ஆலோசனையின்போது, இந்தியாவிலிருந்து மனிதாபிமான உதவிக்கான அடுத்த தொகுப்பு விரைவில் உக்ரைன் வந்து சேரும் என உறுதியளித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு காண வேண்டும்’ என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT