இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீரில் என்ஏஐ சோதனை

9th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கியது தொடா்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-ஏ-இஸ்லாமி உறுப்பினா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஜம்மு மற்றும் தோடா ஆகிய இரு மாவட்டங்களின் 12 இடங்களில் இவ்வமைப்பின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடவடிக்கை திங்கள்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் இளைஞா்களை இவ்வமைப்பில் சோ்த்துக்கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த அவா்களை பயன்படுத்தி வருதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பானது அறக்கட்டளை மற்றும் நலத்திட்ட செயல்பாடுகளுக்கு என்று கூறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடையைப் பெற்று வருகிறது. இத்தகைய நிதி, லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹிஜ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான உயா்நிலை கூட்டத்தை தொடா்ந்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) படி, ஜமாத்-ஏ-இஸ்லாமி 5 ஆண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, இவ்வமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT