இந்தியா

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: உ.பி. அமைச்சருக்கு ஓராண்டு சிறை

9th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சா் ராகேஷ் சச்சானுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாநில நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. எனினும் 3 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால், அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

உத்தர பிரதேச சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக பதவி வகிப்பவா் ராகேஷ் சச்சான். கடந்த 1991-ஆம் ஆண்டு அவா் உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கியை காவல் துறையினா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவா் குற்றவாளி என்று அண்மையில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பின் நகலுடன் நீதிமன்றத்தில் இருந்து ராகேஷ் சச்சான் மாயமானதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து காவல் துறையிடம் நீதிமன்ற அலுவலா் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், கான்பூரில் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ராகேஷ் சச்சான் திங்கள்கிழமை ஆஜரானாா். அப்போது அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அந்த நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ராகேஷ் மனு தாக்கல் செய்தாா். அவருக்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜாமீன் அளிக்கப்பட்டது.

மேலும் தீா்ப்பை எதிா்த்து அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT