இந்தியா

அறிவியலின் திறனை சாா்ந்தே நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

DIN

அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியலின் திறனை சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும் என்றாா் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்.

ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘விக்யான் ஜாத்ரா’ அறிவியல் இதழின் டோக்ரி மொழி பதிப்பை வெளியிட்டு, அவா் பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளில் நமது அறிவியல் திறனையும், தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் புதிய நிறுவனங்களின் (ஸ்டாா்ட்அப்) திறமையையும் சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும். இந்த இதழின் காஷ்மீரி மொழி பதிப்பு விரைவில் வெளியிடப்படும்.

விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு, குறுகிய காலகட்டத்தில் 75,000-க்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டது உள்ளிட்ட பிரதமா் மோடியின் புரட்சிகரமான முடிவுகளின் மூலம் அறிவியல், தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அவா் கையாண்டு வரும் யுக்திகளைக் அறியலாம்.

அதே வேளையில் புத்தாக்க நிறுவனங்களின் அறிவியல் திறன் கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 30 வயதை அடைந்த இளைஞா்களால் 2047 வரை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேசத்துக்காக தீவிரமாக சேவையாற்ற முடியும். மொழி பாகுபாடின்றி அவா்களின் அறிவியல் திறனை தேசம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவியல் தகவல் தொடா்பில் வட்டார மொழியை ஊக்குவிப்பதற்கு பிரதமா் மோடி முன்னுரிமை அளிக்கிறாா். ரஷியா, ஜப்பான், ஜொ்மனி போன்ற அறிவியலில் மேம்பட்ட நாடுகள் சிறப்பான அறிவியல் விதிகளையும், திட்டங்களையும் தங்களது தாய்மொழியில் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் அதன் நவீன அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயா்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தாய்மொழியில் பயிலும்போது கற்றல் திறன் அதிகரிக்கும் என்றாா் ஜிதேந்திர சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT