இந்தியா

‘வெங்கையா நாயுடு எந்தப் பணியையும் சுமையாக கருதியதில்லை’: மோடி

DIN

மாநிலங்களவையில் நடைபெற்று வரும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் தேர்வாகியுள்ளார். இவர், ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

“குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் வெங்கையா நாயுடுவுக்கு நன்றி கூற நாம் அனைவரும் இன்று கூடியுள்ளோம். இந்த அவையின் உணர்ச்சிகரமான தருணம் இது. இந்த அவையில் பல்வேறு வரலாற்று தருணங்கள் உங்கள் முன்னிலையில் நடந்துள்ளது.

“நான் அரசியலில் இருந்துதான் ஓய்வுபெற்றுள்ளேன், பொது வாழ்விலிருந்து அல்ல” என்று நீங்கள் பலமுறை கூறியுள்ளீர்கள். இந்த அவையை தலைமை தாங்கும் பொறுப்பு நிறைவடைந்திருக்கலாம். ஆனால், நாட்டிற்கு மற்றும் என்னைப் போல் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்களின் அனுபவங்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது.

தனிப்பட்ட முறையில், பல்வேறு பொறுப்புகளில் உங்களை நெருக்கமாக கண்டுள்ளேன். உங்களுடன் சில பொறுப்புகளின் இணைந்து பணியாற்றும் பாக்கியமும் எனக்கு கிடைத்திருக்கிறது. கட்சித் தொண்டராக, சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கட்சித் தலைவராக, அவைத் தலைவராக அனைத்து பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை கண்டுள்ளேன். நீங்கள் எந்தப் பணியையும் சுமையாக கருதியதில்லை. ஒவ்வொரு பணியிலும் புதிய வாழ்க்கையை சுவாசிக்க முயற்சி செய்தீர்கள்” என்று பேசினார்.

தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT