இந்தியா

ராஜஸ்தான்: ஷியாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

DIN

ராஜஸ்தானில் ஷியாம்ஜி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியாகினர். 

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் கத்து ஷியாம்ஜி கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயில் வளாகத்தில் காத்திருந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் அனைவரும் ஒரேநேரத்தில் கோயிலுக்குள் செல்ல முயன்றுள்ளனர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியானார்கள்.

பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அத்துடன் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஷியாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக அவர் கூறியுள்ளார். கரோனாவுக்குப் பின்னர் நடைபெறும் திருவிழா என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாக கூறப்படுகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT