இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி பெறும் ஊதியம் எவ்வளவு? ஆச்சரியம் தரும் ஆண்டறிக்கை

PTI


புது தில்லி: இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி, இரண்டாவது ஆண்டாக கடந்த நிதியாண்டிலும் தனக்கு மாதச் சம்பளம் வேண்டாம் என்று அறிவித்துவிட்டதாக ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானியின் ஊதியம் என்ற இடத்தில் இல்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநர் முகேஷ் அம்பானி, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட பல்வேறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில், தாமாக முன் வந்து, தனக்கு மாத ஊதியம் வேண்டாம் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர் 2021 - 22ஆம் நிதியாண்டிலும் தனது ஊதியத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

இவ்விரு நிதியாண்டுகளிலும் முகேஷ் அம்பானி, மாத சலுகைப் படிகள் உள்ளிட்ட எதையும் பெறவில்லை. மேலும், தான் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண் இயக்குநராக பணியாற்றுவதற்காக எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக தனக்கு ஊதிய உயர்வை செய்து கொள்ளாமல், தொடர்ந்து 11 ஆண்டுகளாக வெறும்  ரூ.15 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தார் முகேஷ் அம்பானி. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஊதியத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டார்.

இதே நிறுவனத்தில் பணியாற்றும் இவரது உறவினர்களான நிகில் மற்றும் ஹைதல் மேஸ்வானி ஆகியோருக்கான ஊதியமும் மாற்றம் செய்யப்படாமல் ரூ.24 கோடியாகவே உள்ளது. ஆனால் ரூ.17.28 கோடி தரகுத் தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT