இந்தியா

நாந்தேட் செல்கிறார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

8th Aug 2022 12:32 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நாந்தேட் மாவட்டத்திற்கு திங்களன்று வருகை தரவுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சிவசேனாவின் நாந்தேட் மாவட்டத் தலைவர் உமேஷ் முண்டே மற்றும் பல தலைவர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து ஷிண்டே இந்த பயணம் மேற்கொள்கிறார். 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முண்டே உள்ளிட்டோரை ஞாயிற்றுக்கிழமை பதவி நீக்கம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஷிண்டே ஞாயிறன்று தலைநகர் சென்றிருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஆந்திரத்தில் திருப்பதிக்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி

கடந்த ஜூனில் ஷிண்டே மற்றும் பல சிவசேனா தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இதைத் தொடர்ந்து, ஜூன் 30-ம் தேதி சிவசேனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். சில நாள்களுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடியில் உள்ள சில பிரச்னைகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவு செய்யலாம் என்று ஆகஸ்ட் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT