இந்தியா

மின்சார சட்டத்திருத்த மசோதா: நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

DIN

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று மசோதா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மசோதா அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT