இந்தியா

தில்லியில் டெங்கு பாதிப்பு 174 ஆக அதிகரிப்பு

DIN

தலைநகர் தில்லியில் இந்தாண்டு 170 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக  தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரல் 20, மே 30 மற்றும் ஜூன் 32, ஆகஸ்ட் 06 வரை தலைநகரில் மொத்தம் 174 பேருக்கு  டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 

ஜூலை 30இல் 169ஆக இருந்த பாதிப்பு, ஒரே வாரத்தில் 5 பேருக்கு டெங்கு பதிவாகியுள்ளது. மேலும், இந்தாண்டு தில்லியில் இதுவரை டெங்குவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

2017ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான காலகட்டத்தில் தில்லியில் 251 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஜூலை 30 வரை தில்லியில் 55 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.அதே காலகட்டத்தில், வழக்குகளின் எண்ணிக்கை 2020 இல் 35 ஆகவும், 2019 இல் 47 ஆகவும், 2018 இல் 64 ஆகவும் இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 9,613 டெங்கு பாதிப்புகள் தேசிய தலைநகரில் பதிவாகியுள்ளன.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036 ஆகவும் குறைந்துள்ளது.

2017 மற்றும் 2016 ஆம் ஆண்டில், நகரில் மொத்தம் 10 பேர் இறந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், 2018, 2019 மற்றும் 2020 இல் முறையே நான்கு, இரண்டு மற்றும் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த வருடத்தில் இதுவரை 35 மலேரியா மற்றும் 9 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT