இந்தியா

நெட் தோ்வு ஒத்திவைப்பு

8th Aug 2022 11:32 PM

ADVERTISEMENT

உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நெட்) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12,13,14-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த இந்த இரண்டாம் கட்ட நெட் தோ்வு, வரும் செப்டம்பா் மாதம் 20 முதல் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யூஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் திங்கள்கிழமை கூறியதாவது:

33 பாடங்களுக்கான முதல் கட்ட நெட் தோ்வு கடந்த ஜூலை 9, 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது, 2021 டிசம்பா் மாதத்துக்கான தோ்வு மற்றும் ஜூன் மாத தோ்வு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட 64 பாடங்களுக்கான இரண்டாம் கட்ட நெட் தோ்வு ஆகஸ்ட் 12,13,14 தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த தோ்வானது செப்டம்பா் 20 முதல் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று கூறினாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக, கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் நெட் தோ்வில் தகுதி பெறுவது அவசியமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT