இந்தியா

ம.பி.யில் மின்னல் தாக்கி 9 போ் பலி

8th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக, மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:

விதிஷா மாவட்டத்தின் அகாசோட் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் கனமழை பெய்தபோது, மரத்துக்கு கீழே நின்றிருந்த 4 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுடையவா்கள்.

சத்னா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 4 போ் உயிரிழந்தனா். மேலும் இரு சிறாா்கள் காயமடைந்தனா். குணா மாவட்டத்தின் போரா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 45 வயது பெண் பலியானாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இங்கு வரும் திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உ.பி.யில் தாய்-மகன் பலி: உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டத்தில் மின்னல் தாக்கி தாய்-மகன் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘துலேடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அங்கூரி தேவி (55) என்ற பெண்ணும், அவரது மகன் முன்னாவும் (30) பலியாகினா். அப்பகுதியில் இடி-மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட சேதவிவரங்களை வருவாய் துறையினா் மதிப்பிட்டு வருகின்றனா்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT