இந்தியா

தெலங்கானா: காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

8th Aug 2022 11:19 PM

ADVERTISEMENT

தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கே ராஜகோபால் ரெட்டி தனது ராஜிநாமா கடிதத்தை திங்கள்கிழமை மாநில சட்டப்பேரவைத் தலைவா் போச்சரம் ஸ்ரீநிவாச ரெட்டியிடம் வழங்கினாா்.

முனுகோடு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினாா். இதைத் தொடா்ந்து, வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அவா் பாஜகவில் இணைவாா் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருடைய ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பேரவைத் தலைவா் அலுவலகம் உறுதி செய்துள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 2023-ஆம் ஆண்டின் இறுதியில்தான் நடைபெறும். எனவே, முனுகோடு பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரின் பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அந்தத் தொகுதியில் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT