இந்தியா

அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 கோடி விமானப் பயணிகளை நாடு எதிர்நோக்கி உள்ளது: ஜோதிராதித்ய சிந்தியா

7th Aug 2022 09:05 PM

ADVERTISEMENT

அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 கோடி விமானப் பயணிகளை நாடு எதிர்நோக்கி உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. தில்லி சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த முதல் விமானத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் வி கே சிங், சிவில் விமானத்துறை செயலர் ராஜீவ் பன்சல் ஆகியோர் தில்லியில் காணொளிக்காட்சி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

இதையும் படிக்க- மக்கள் நலனுக்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி 

நிகழ்ச்சியில் ஆகாச ஏர் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி வினய் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது. உடான் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 425 வழித்தடங்கள் ஆயிரம் வழித்தடங்களாக அதிகரிக்கும். மேலும்  68 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமாக நாட்டில் மொத்தம் 100 விமான நிலையங்கள் என்ற இலக்கை எட்ட முடியும்.

ADVERTISEMENT

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 40 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். போக்குவரத்து துறையில் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்துக் போலவே உள்நாட்டு விமான போக்குவரத்து மிக முக்கியமான இடத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT