இந்தியா

மகாராஷ்டிரம்: ஆகஸ்ட் 15க்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்

7th Aug 2022 04:42 PM

ADVERTISEMENT

இந்த வாரத்தில் மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் 15 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADVERTISEMENT

கடந்த ஜூன் 30 ஆம் தேதி மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றுக் கொண்டதிலிருந்து அவர்கள் இருவருமே அமைச்சரவையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT