இந்தியா

2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7th Aug 2022 03:32 PM

ADVERTISEMENT

 

புவிக் கண்காணிப்பிற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ADVERTISEMENT

படிக்கமாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை எஸ்எஸ்எல்வி

அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று  8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

படிக்கவிண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இஓஎஸ்-02, ஆசாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதில் நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT