இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்!

5th Aug 2022 08:06 AM

ADVERTISEMENT

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, 
வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. இதையொட்டி தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

குறிப்பாக தில்லியில் காங்கிரஸ் அலுவலகம் உள்ள அக்பர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 

ஜந்தர் மந்தரைத் தவிர, புதுதில்லி மாவட்டத்தின் முழுப் பகுதியிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தில்லி: மழையால் தள்ளிப்போன உலகின் மிகப் பெரிய தேசிய கொடி உருவாக்கும் நிகழ்வு

ADVERTISEMENT
ADVERTISEMENT