இந்தியா

காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்: தில்லியில் 144 தடை உத்தரவு

5th Aug 2022 08:22 AM

ADVERTISEMENT

 

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துள்ள நிலையில், பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம்  உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | குரங்கு அம்மை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்

ADVERTISEMENT

இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. 

அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆக.5) மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. 

இந்நிலையில், தலைநகர் தில்லியில் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

மேலும், ஜந்தர் மந்தரை தவிர தில்லியின் பிற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை என தில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT