இந்தியா

பாரம்பரிய நினைவிடங்களில் நாளை முதல் கட்டணமின்றி அனுமதி

4th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கலாசார அமைச்சா் ஜி.கிருஷ்ணன் ரெட்டி தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு முழுவதுமுள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT