இந்தியா

குரங்கு அம்மை குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

2nd Aug 2022 02:57 PM

ADVERTISEMENT

குரங்கு அம்மை பாதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இன்று கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதை அடுத்து கேரளத்தில் 4 பேர், தில்லியில் ஒருவர் என 5 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 

ADVERTISEMENT

'குரங்கு அம்மை குறித்து அச்சப்படத் தேவையில்லை. இதுகுறித்து மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. ஏனெனில் குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம். மத்திய அரசின் சார்பாக நீதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளோம். அந்த குழுவின் படி, தற்போதைய நிலைமை, அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். கேரள அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து உதவி தேவைப்பட்டால் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். மத்திய அரசின் சிறப்புக் குழு கேரள அரசுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. 

கேரளத்தில் முதல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிவிட்டது. 

குரங்கு அம்மை யாருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் அவரது குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் 12- 13 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறெனில் தொற்று பாதிப்பைக் குறைக்க முடியும்' என்று பேசியுள்ளார். 

இதையும் படிக்க | கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி

Tags : monkeypox
ADVERTISEMENT
ADVERTISEMENT