இந்தியா

நாட்டில் ஒரேநாளில் 13,734 பேருக்கு கரோனா 

2nd Aug 2022 11:31 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் மேலும் 13,734  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,40,50,009 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,39,792 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 34 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,26,430 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 18,397 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,33,83,787 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

இதையும் படிக்க: உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் யாசின் மாலிக்

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 204.60 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT