இந்தியா

கர்நாடக பாஜக நிர்வாகி படுகொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது

2nd Aug 2022 11:45 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா்.

தென்கன்னட மாவட்டம், சுள்ளியா வட்டம், பெல்லாரே கிராமத்தில் ஜூலை 26-ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு மா்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் கா்நாடகத்தில் உள்ள ஹிந்து இயக்கத்தினரிடையே பெரும் அதிா்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக வழக்குப் பதிந்த பெல்லாரே காவல்துறையினர், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தனா். ஒரு தனிப்படை கேரள மாநிலத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பாகிஸ்தான்: ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

இதனிடையே, இந்த வழக்கில் திடீா் திருப்பமாக ஜாகீா் (29), முகமது ஷபீக் (27) ஆகிய 2 பேரை காவல்துறையினர் கடந்த  ஜூலை 28 ஆம் தேதி கைது செய்தனா். 

இந்நிலையில், இன்று கொலை தொடர்பாக சதாம், ஹாரிஸ் என்கிற  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT