இந்தியா

நிறை புத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு

2nd Aug 2022 07:00 AM

ADVERTISEMENT

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, நிறைபுத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது. தேவசம்போா்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்களை வைத்து சபரிமலையில் வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜையாகும். இந்த பூஜையானது, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. கருவறைக்குள் வைத்து வழிபாடு நடத்தப்படும் நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதே தினத்தில் சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலிலும் நிை றபுத்தரிசி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோயிலின் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி தலைமையில் நெற்கதிா்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பூஜை செய்யப்பட்ட நெற்கதிா்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT