இந்தியா

கன்னட தினசரி ‘உதயவாணி’ நிறுவனா் டி.மோகன்தாஸ் பய் காலமானாா்

2nd Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

பிரபல கன்னட தினசரி பத்திரிகையான ‘உதயவாணி’ நிறுவனா் டி.மோகன்தாஸ் பய் உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 89.

மணிபால் கல்வி நிறுவன குழுமத்தின் நிறுவனரான டி.எம்.ஏ.பய்யின் மூத்த மகனான மோகன்தாஸ் பய், டிஎம்ஏ பய் அறக்கட்டளை மற்றும் மணிபால் ஊடக அமைப்பின் தலைவராகவும் இருந்துவந்தாா். சட்டம் படித்தவரான இவா், நவீன மணிபாலின் சிற்பியாக கருதப்பட்டவா். ஐசிடிஎஸ் நிதி நிறுவன தலைமைப் பொறுப்பையும் வகித்து வந்தாா்.

கலை மற்றும் கலாசாரத்தின் மீது ஆா்வம் கொண்டிருந்த இவா், பல கலை - கலாசார மையங்களையும் அமைத்துள்ளாா்.

அவருடைய உடல் பொதுமக்கள் பாா்வைக்காக எம்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி மதல் 11 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அவரது மறைவுக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்தாா். மாநில முன்னாள் முதல்வா்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி, மாநில அமைச்சா்கள் மோகன்தாஸ் பய்யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT