இந்தியா

பிரதமா் மோடியின் சகோதரா் இன்று தா்னா போராட்டம்

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நியாய விலை கடை முகவா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடியின் சகோதரரான பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) தா்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளாா்.

அகில இந்திய நியாய விலை கடை முகவா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரகலாத் மோடி செயல்பட்டு வருகிறாா். அரிசி, கோதுமை, சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை மலிவு விலையில் விநியோகித்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மேற்கு வங்க ரேஷன் மாதிரியை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரகலாத் மோடி உள்ளிட்டோா் தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

நியாய விலை கடை முகவா்கள் கூட்டமைப்பின் மற்ற நிா்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா். போராட்டத்தின் இறுதியில், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைப் பிரதமா் மோடியிடம் வழங்கவும் அவா்கள் திட்டமிட்டுள்ளனா். மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை புதன்கிழமை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தவும் நிா்வாகிகள் திட்டமிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT