இந்தியா

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிலிருந்து மத்திய அரசுத் துறைகளுக்கு கொள்முதல்

2nd Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை கொள்முதல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.26,357.46 கோடி, 2018-19-ஆம் ஆண்டில் ரூ.40,399.70 கோடி, 2019-20-ஆம் ஆண்டில் ரூ.39,049.45 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.40,817.78 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.52,374.22 கோடி அளவுக்கும், நடப்புநிதியாண்டில் இதுவரை ரூ.9,665.35 கோடி அளவுக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களிலிருந்து சரக்கு மற்றும் சேவை கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT