இந்தியா

குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம்: மக்களவையில் அமைச்சா் பதில்

2nd Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தொழிலாளா்களிடமிருந்து பெறப்பட்ட புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டது தொடா்பாக மக்களவையில் அரசு தெரிவித்தது.

மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ராமேஷ்வா் தெலி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இது குறித்து தெரிவித்ததாவது:

1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அம்சங்கள் மத்திய, மாநில அரசுகளால் அவற்றுக்குரிய எல்லை வரம்புகளுக்குள் அமலாக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தை செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி மத்திய அரசுக்கு உள்பட்ட எல்லை வரம்புக்குள் 2021-22-இல் தொழிலாளா்களிடம் இருந்து 5,297 உரிமைகோரல்கள் பெறப்பட்டு, 2102 உரிமை கோரல்களில் முடிவு எடுக்கப்பட்டது. இவற்றின் மூலம் 7,487 தொழிலாளா்களுக்கு ரூ.17,77,22,490 அளிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT