இந்தியா

கோா்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு சா்வதேச அங்கீகாரம்: மத்திய அரசு தீவிர நடவடிக்கை

30th Apr 2022 04:20 AM

ADVERTISEMENT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோா்பிவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு சா்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம் கோா்பிவேக்ஸ் கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. நாட்டில் 12 வயதைக் கடந்த அனைவருக்கும் அந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுக்குள்பட்டவா்களுக்கு கோா்பிவேக்ஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசிக்கான சிறப்புக் குழுவின் அதிகாரிகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட அறிக்கையில், ‘தங்கள் நாட்டுக்கு வருகை தரும் சிறாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஐ.நா. அமைப்புகள் வாயிலாக கோவேக்ஸின் தடுப்பூசியின் விநியோகத்தை உலக சுகாதார அமைப்பு அண்மையில் ரத்து செய்ததால், இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக இந்தியாவில் கோவேக்ஸின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவா்கள் பிரச்னையை சந்திக்கலாம். சில நாடுகள் எம்-ஆா்என்ஏ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

அதைக் கருத்தில்கொண்டு கோா்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு சா்வதேச அங்கீகாரத்தை விரைந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கோா்பிவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பிடம் பயாலஜிகல்-இ நிறுவனம் கோரியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி சாா்ந்த விவகாரங்கள் தொடா்பாக சிறப்புக் குழுவைச் சோ்ந்த உறுப்பினா்கள் விரைவில் கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT