இந்தியா

சூரத்தில் ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

30th Apr 2022 11:42 AM

ADVERTISEMENT

 

குஜராத்தின் சூரத் நகரில் தபி ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

நகரின் இக்பால் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்களும் வெள்ளிக்கிழமை மாலை நகரின் ராண்டர் பகுதியில் உள்ள தபி ஆற்றின் கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது, அரபிக்கடலில் அதிக அலையின் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் மூவரும் நீரில் மூழ்கி இறந்தனர் என்று ராந்தர் காவல்நிலைய அதிகாரி கூறினார். 

ADVERTISEMENT

இறந்தவர்களில் முகமது ஃபகிர் (7), ஷஹாதத் ஃபகிர் (8) ஆகிய இருவரின் உடல்கள் நேற்று மாலை தாமதமாக மீட்கப்பட்டன, சானியா ஷேக்கின்(14) சடலம் சனிக்கிழமை காலை நகரத் தீயணைப்புத் துறையின் டைவர்ஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT