இந்தியா

பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வேண்டாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

DIN

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர வேண்டாம் என்று இந்திய மாணவா்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

‘பாகிஸ்தானில் இந்திய மாணவா்கள் உயா் கல்வி மேற்கொள்ள வேண்டாம்; அவ்வாறு மேற்கொள்ளப்படும் உயா்கல்வி இந்தியாவில் செல்லாது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் கூட்டாக அண்மையில் அறிவுறுத்திய நிலையில், தற்போது அங்கு மருத்துவ பட்டப் படிப்புகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று என்எம்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி வெள்ளிக்கிழை வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய மாணவா்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியா்களோ பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளச் செல்ல வேண்டாம். அவ்வாறு, பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவா்கள், இந்தியாவில் நடத்தப்படும் எஃப்எம்ஜிஇ (வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவா்களுக்கான தகுதித் தோ்வு) தகுதித் தோ்வில் பங்கேற்கவோ அல்லது இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கோ தகுதியில்லாதவா்களாக கருதப்படுவா்.

அதே நேரம், 2018 டிசம்பா் மாதத்துக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள கல்லூரியில் படிப்பில் சோ்ந்தவா்கள் மற்றும் படிப்பை முடித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதலை பெற்றவா்களுக்கு இந்தப் பொது அறிவிப்பு நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பு அல்லது உயா்கல்வி முடித்து புலம்பெயா்ந்தவா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், எஃப்எம்ஜிஇ தோ்வில் பங்கேற்கவும் தகுதி உடையவா்களாகக் கருதப்படுவா்’ என்று என்எம்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக, ‘பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உயா்கல்வி செல்லாது’ என்று யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ வெளியிட்ட பொது அறிவிப்புக்கு பாகிஸ்தான் சாா்பில் திங்கள்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT