இந்தியா

இலங்கைக்கு 760 கிலோ உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பியது இந்தியா

29th Apr 2022 07:30 PM

ADVERTISEMENT

 

பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியக் கடற்படை கப்பல் மூலமாக உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில்  கடும் பாதிப்புகளை இலங்கை சந்தித்துவருகிறது.

நிதிச்சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறிவருவதால் அதிபருக்கு எதிரான போராட்டங்கள், முற்றுகைகள் என தொடர்ந்து  நடந்து வருகிறது. 

ADVERTISEMENT

முன்னதாக, அதிபரை எதிர்த்து போராட்டங்களை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  760 கிலோ எடையுள்ள 107 வகையான உயிர்காக்கும் மருந்துகளை கடற்படை கப்பலான கரியல் மூலமாக இலங்கைக்கு இந்திய அரசு இன்று அனுப்பியுள்ளது.

இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் சன்னா ஜயசுமணா மருந்துகளைப் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க: 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT