இந்தியா

இன்று 39-ஆவது தலைமை நீதிபதிகள் மாநாடு: உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது 

29th Apr 2022 04:22 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 39-ஆவது தலைமை நீதிபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.

இதில் 25 உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதல் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் வரை கலந்துரையாடல்கள், ஆய்வு நடைபெறும் என உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து மாநில முதல்வா்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதை பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். இந்த இரு மாநாடுகளும் ஏறத்தாழ 6 ஆண்டுகள் கழித்து நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT