இந்தியா

ம.பி: பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத் 

28th Apr 2022 06:12 PM

ADVERTISEMENT

போபால்: மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்  சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங்கை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் இன்று கமல்நாத்துக்கு எழுதிய கடிதத்தில்,  ராஜிநாமாவை  காங்கிரஸ் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

கமல்நாத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை வகித்து வந்தார். இப்போது அவர் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமே செயல்படுவார்.

ADVERTISEMENT

இரண்டு பதவிகளில் ஒன்றை விட்டுக்கொடுப்பது என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால் இரண்டு பதவிகளிலும் தொடர்ந்து பணியாற்றுமாறு கட்சி கேட்டுக் கொண்டதாக கமல்நாத் முன்னர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT